Wednesday, September 28, 2011

சனிக்கிழமை



வாரத்தில் ஒரு நாள்
வழக்கமாய் தென்படும் தலைகள்
இத் தினத்தன்று காணாமல் போகக் கூடும்

மேலாடை மாற்றி கொன்று
மின்னொலிப்  பூச்சுக்குள்
வர்ண ஜாலம் காட்டும்  - என் ஒரு
கைச் சொடுக்கில்

அலுவலகப் பெட்டியாம்
என் முன்னே சமர்த்தாய்
அமர்திருக்கும்
என் ஆசை கணிபொறிப்  பெட்டி

கடனே என்று
கடமை செய்து கொன்றிருக்கும்
சில கைகள்
சிவனே என்று
சும்மா  இருக்கும்
சில ..............

எது எப்படி இருப்பினும்
சில கண்கள் தாமே என்று
முறைத்து கொன்றிருக்க
பெரும்பாலும் எல்லா காதுகளும்
கேட்டுக் கொண்டிருக்க

வாய்கள் வலிக்காமல்
உதிர்த்து கொன்றிருக்கின்றன
உயிரற்ற  வார்த்தைகளை

அந்நியப்பட்ட தினமாய்
அகப்பட்டவர்களின் வாழ்கையில்
கடந்துபோய்க் கொன்றிருகின்றன 
யார் கையிலும் சிக்காமல்!!- சபிக்கப்பட்ட
இந்த ஒரு  நாள்! 

Friday, September 16, 2011

சாமி உண்டியல்


அவ்வப்போது    சேர்த்த  கைக்காசுகள்
நிரம்பி வழிந்த பிறகும்
எடுக்க முடிவதில்லை..
காய்ச்சல்   வந்த 
என் மகள்
செவ்ளி
நான்    சொன்னதை எனக்கே
சொல்கிறாள்!!- சாமி
கண்ணை குத்துமாம்!!
                                            

Thursday, March 3, 2011

மனிதர்களின் ரசனை

குட்டிப் பாப்பா
"அழகு" என்றும்
திருஷ்டி படப்போகுது என்றும் சொல்லி                                      
ஆளாளுக்கு
ஒரு மைப் பொட்டு வைத்து
சிரித்துக் கொண்டிருந்த 
என்னை அழவைத்து
இரசித்து பார்த்தார்கள்..

Tuesday, March 1, 2011

நடுநிசி பேய்களும் இரவும்




பேய் படம்
பார்த்துவிட்டு
உறங்கச் செல்கையில்
கதையில் வராத வேம்பு மரங்கள்
நடுநிசியில்!
பெருமூச்சு விட்டு பேசிக் கொண்டிருகின்றன..
ஜன்னல் ஓரத்தில்
பேய்களுக்கு! பதிலாக...
                            

நட்பின் பிரிவு


ஒரு சில வார்த்தைகளுடன்
முடித்துக் கொள்ளும்  
உரையாடலின் முடிவில். 
முடிவுறாமல் தொடரும்
நீண்ட 
மௌனத்தை போலவே
இன்னும் தொடருகிறது...
பிரிவின் வலி!
நம்மையறியாமலே!   




Thursday, February 10, 2011

பிரிவின் தவிப்பு

வெட்டப்பட்ட மரம் போல் 
துளிர் விட தவித்துக் கொண்டிருக்கிறது
பிரிந்து சென்ற
உன்னையும் என்னையும் போலவே
நமது நட்பும்.




Sunday, January 9, 2011

கலவியும் ஊடலும்

எத்தனையோ முறை
பேசித் தீர்த்த பின்பும்
உனதுடனான

ஊடல்கள் மட்டும்
யாரிடமும் சொல்லாமலே!
வந்துச் செல்கின்றன‌
கூடலின் முன்பொழுதில்...