Friday, December 31, 2010

உன் ஞாபகம்

அந்திம நேரத்தின்
ஒரு தினத்தில்
உறங்காமல் பயணித்துக் கொண்டிருக்கும்
வேளையில்
காற்றில் கரைந்த
பேருந்தின்  பாட்டுகளுக்கிடையில்
உனது நினைவலைகளில்
ஒன்று
சத்தமின்றி உனதுடனான  
ஒரு பயணத்தை
ஞாபகபடுத்திச்   சென்றது
நான்   கேட்காமலே..

Wednesday, December 29, 2010

மாறுகிற மனது


இரண்டு  மணி நேரப் பயணம்
கஷ்டப்பட்டு
கூட்டத்தில் முன்னேறி இடம்பிடித்தேன்
வெட்கையான ஒரு பொழுது
களைப்புடன் பல முகங்கள்..
அவ்வப்போது
வயதான மூதாட்டிக்கோ! பாட்டிக்கோ!
இடம் கொடுத்து
உதவி செய்யும்  மனதிற்கு
இன்று இறக்கமில்லையோ?
சலனமற்று
இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்
ஒரு  சிறுமி 
கால் வலிக்க நின்று  வருகிறாள்
பேருந்துப்  புறப்பட்ட இடத்திலிருந்து...

இரசிப்பு

வழக்கம் போல் 
பயணம்
ஆனால் இன்றும் 
எனக்கு வாய்க்கவில்லை
எந்தப்  பெண்ணும்
என் பக்கத்தில்!
அது சினிமாவில்
மட்டும்தான்
சாத்தியம்  போல
இருப்பினும் 
முன் சீட்டில்
ஒற்றை ரோஜா
கலையாத   கூந்தல்
விரல்கள் சீவும் 
முன்பக்க தலை முடி
ஊதா  நிற 
உடையில் 
அவள்
அடிக்கடி
இதழில்  இருந்து உதிரும்  
சில வார்த்தைகள்
கூடவே  அவளின் தோழன்
இருந்தப் போதிலும்
யாரும் பார்க்கா வண்ணம்
காதுகள்   கேட்டுக் கொண்டிருக்கின்றன!   
கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன!
அவள் 
அறிந்தும் அறியாமலே..


Monday, December 27, 2010

எனது தேவதை

 
வாரத்தின் இறுதி நாள் 
வழக்கம்போல்
ஒரு பயணம்
கண்கள் தேடும் 
கனவுத் தேவதை
இன்று வரைக்   கண்டதில்லை
எனக்கான  ஒருத்தி
எங்கோ பிறந்திருக்கிறாள்
என்று தெரியும்
சில சமயம்
ஒற்றை ரோஜாப்  பூவுடன்!
 நீண்ட கூந்தல்!
காதோரம் ஜிமிக்கி!
இப்படியான 
பெண்களை பார்க்கையில் 
எனது தேவதை
இவர்களின் 
தங்கையாகவோ
அக்காவாகவோ
இருப்பாள் என்று
என்ன தோன்றுகிறது.

கால் வலிக்கவில்லை

கம்பியைத் தாங்கியபடி
நின்றே செல்லும்
நெடுந்தொலைவுப்  பயணத்தில்
என் பக்கத்தில்
ஒரு
அழகானப் பெண் 
அமர்ந்திருக்கிறாள்..

முதல் பரிசு

 
உன் பெயரை
மட்டும்
எழுதினேன்
கவிதை போட்டியில்